குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர் பிறந்த நாளையொட்டி நடந்த முப்பெரும் விழா

குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர் பிறந்த நாளையொட்டி நடந்த முப்பெரும் விழா
X

குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர் ஜேம்ஸ் பிறந்த நாளையொட்டி நகரமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர் பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் விழா, அலுவலகம் திறப்பு விழா, அன்னதான விழா, நடைபெற்றது

குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர் பிறந்த நாளைமுன்னிட்டு மரக்கன்று நடும் விழா, அன்னதான விழா, நகரமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 11வது வார்டு உறுப்பினர் ஜேம்ஸ் பிறந்தநாளையொட்டி 50 மரக்கன்று நடும் விழா, நகரமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா ஆதரவற்றோர் மையத்தில் அன்னதான விழா நடைபெற்றது.

இதில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியை.யும் ஆதரவற்றோர் மையத்தில் அன்னதான நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்தார். முன்னதாக நகர்மன்ற உறுப்பினர் அலுவலகத்தை நகராட்சி சேர்மன் திறந்து வைத்தார். வந்திருந்த அனைவருக்கும் ஆதரவற்றோர் மையத்தின் நிர்வாகி ஹேமமாலினி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இதில் கவுன்சிலர்கள் வேல்முருகன், அழகேசன், சியாமளா, தி.மு.க. நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி