குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமா?

குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தாமதமா?
X

பைல் படம்.

குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மிகவும் கால தாமதமாவதாக கூறபடுகிறது.

குமாரபாளையம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மிகவும் கால தாமதம் ஆவதாக கூறபடுகிறது.

இது குறித்து பா.ஜ.க. பிரமுகர் வழக்கறிஞர் தங்கவேல் கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாத ஊதியம் தாமதமாக வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

இதனால் அத்தியாவசிய செலவினங்களுக்காக மிகவும் சிரமப்பட நேரிடுகிறது. பணி நிரந்தரம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதை போல் ஒப்பந்த பணியாளர்களுக்கு தாமதமில்லாமல் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்