குமாரபாளையம் நகராட்சி ஆணையர் விஜயகுமார் திடீர் பணியிடமாற்றம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் பைல் படம்.
District Commissioner - குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமார் நாகர்கோயில் மாவட்டம், குளச்சல் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குமாரபாளையத்திற்கு கமிஷனராக யார் வருவார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளது. இதற்கு முன்பிருந்த பெண் கமிஷனர் சில மாதங்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது விஜயகுமார் வந்து சில மாதங்கள் ஆன நிலையில் இவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி மேலாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் கமிஷனர் இடமாற்றம் செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடிய சம்பவத்தால் நகராட்சி நிர்வாகத்தில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதே போல் குமாரபாளையம் நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், மாவட்ட அலுவலராக பணியில் சேர்ந்த மோகன் தற்போது பவானிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன் குமாரபாளையம் வரவிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu