குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அதிமுக கவுன்சிலர் மீது போலீசில் புகார்

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அதிமுக கவுன்சிலர் மீது போலீசில் புகார்
X

விஜயகுமார், நகராட்சி கமிஷனர், குமாரபாளையம்.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- குமாரபாளையம் நகராட்சியின் 30வது வார்டு கவுன்சிலர் பாலசுப்ரமணி நகராட்சி அலுவலகத்திற்குள் எனது அறையில் அத்துமீறி உள்ளே நுழைந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு அனுமதி வழங்குமாறு தெரவித்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததினால் தகாத வார்த்தைகளால் பேசியும், உன்னை என்ன செய்கிறேன் பார், என்றும் எனக்கு அச்சுறுத்தல் விடும் வார்த்தைகளால் பேசினார். எனவே, கவுன்சிலர் பாலசுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்கவும், எனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!