அம்மா உணவகத்தில் நீராவி கொதிகலன் ஆய்வு செய்த சேர்மன்

அம்மா உணவகத்தில் நீராவி கொதிகலன் ஆய்வு செய்த சேர்மன்
X

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நீராவி கொதிகலன் செயல்பாட்டினை சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நீராவி கொதிகலன் செயல்பாட்டினை சேர்மன் ஆய்வு செய்தார்.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த ஆட்சியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படவேண்டுமென்ற அறிவுறுத்தினார்.

அதன்படி, குமாரபாளையம் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதிய வேளையில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பழுதடைந்த நீராவி கொதிக்கலன் மற்றும் வெட் கிரைண்டர் புதிதாக பொருத்தும் பணி மற்றும் சமையல்கூட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், ராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ராஜ்கணேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!