குமாரபாளையம்: மண்டபம் கட்டும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ. தங்கமணி

குமாரபாளையம்: மண்டபம் கட்டும் பணியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ. தங்கமணி

குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் அருகே கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தை, சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி பார்வையிட்டார்.

குமாரபாளையத்தில், சொந்தநிதியில் இருந்து, மக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்படும் திருமண மண்டபத்தை, எம்.எல்.ஏ. தங்கமணி ஆய்வு செய்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பரப்புரைக்காக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதிக்கு அப்போதைய மின்சார துறை அமைச்சரும்,தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி வந்தபோது, அங்காளம்மன் கோவில் பின்புறம், காவிரி கரையில் செங்குந்தர் மண்டபத்தை, ஷீட்டுக்கு பதிலாக கான்கிரீட் தலமாக மாற்றி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

தற்போதைய எம்.எல்.ஏ.வான தங்கமணி, செங்குந்தர் சமுதாயத்தினர் இக்கோரிக்கை ஏற்று, சட்டமன்ற உறுப்பினரின் சொந்த நிதியில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி, தற்போது மண்டபப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ. தங்கமணி பார்வையிட்டு, ஆலோசனைகளை கூறினார்.

இதுகுறித்து, குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி கூறும்போது, கட்டுமானப்பணிகள், விரைவாக நடைபெற்று வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story