குமாரபாளையம் சிறுமி பாலியல் சம்பவத்தில் தாய் மீது புதிய வழக்கு

குமாரபாளையம்  சிறுமி பாலியல் சம்பவத்தில்  தாய் மீது புதிய வழக்கு
X
குமாரபாளையம் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையில் தாய் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் 2மூத்த மகள்களுக்கும் திருமணம் நடந்து விட்டது.

இந்த நிலையில் 6ம் வகுப்பு வரை படித்து விட்டு தனது அக்கா வீட்டில் தங்கியிருந்த அவர்களது 14 வயதே ஆன 3வது மகள் வீட்டில் இருந்தபோது அக்கா கணவர் சின்ராஜ் என்பவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து சின்ராஜின் நண்பர்கள் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களான குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோரும் சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.

குமார் தன்னை மிரட்டி உறவு கொண்டதை தாயாரிடம் சிறுமி தெரிவித்ததை அடுத்து நடந்த தகராறில், குமார் பஞ்சாயத்து பேசி ௹.10 ஆயிரம் வாங்கி உடல்நல பாதிப்பில் இருந்த அவரது கணவருக்கு அந்த பணத்தை பயன் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வறுமையில் இருந்த சிறுமி வீட்டு வேலைக்கு சென்றார். அந்த வீட்டின் உரிமையாளர் குமாரபாளையம் மத்திய அரசு நிறுவன அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிகிறார். அவரது பெயர் கண்ணன். அவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் பன்னீர்செல்வம், நாய் சேகர், அபிமன்னன், கோபாலகிருஷ்ணன் சங்கர், சரவணன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி உறவு வைத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதை அடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியாவிடம் சிறுமியின் பெற்றோர் தொலைபேசி மூலம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை செய்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியா, இது குறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தினார். மேலும் தலைமறைவான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், சிறுமிக்கு 15வயதில் திருமணம் செய்து வைத்ததற்காகவும் சிறுமியின் தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் தாய் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 12 பேரும் நாமக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி சசிரேகா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து தலைமறைவான முருகனை 4 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

குமாரபாளையம் பகுதியில் 14 வயது சிறுமியை 12 நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!