குமாரபாளையம் ம.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் அ.தி.மு.க.வில் ஐக்கியம்

குமாரபாளையம் நகர ம.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் சிவகுமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
குமாரபாளையம் ம.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் சிவகுமார் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். நகராட்சி கவுன்சிலர்கள் நந்தினிதேவி, வள்ளியம்மாள், ரேவதி, கோட்டைமேடு ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன், வரிசையில் தற்போது, குமாரபாளையம் முன்னாள் ம.தி.மு.க. நகர செயலாளர் சிவகுமாரும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் நகராட்சி தலைவர் வைத்த பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது.
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் கடநத ஆக. 20ல் மாநாடு நடைபெற்றது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் பேனர்கள் வைத்து விளம்பரம் செய்து இருந்தனர். குமாரபாளையம் அ.தி.மு.க. முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் சார்பில், இந்த மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்கும் விதமாக, மாநாட்டிற்கு பொதுச் செயலாளர் அழைக்கிறார் என்ற வாசகத்துடன் பள்ளிபாளையம் பிரிவு சாலை மற்றும் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை அவ்வழியே செல்பவர்கள் பார்த்த போது, அந்த பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டிருந்தது. இது குறித்து குமாரபாளையம் அதிமுக நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu