எல்இடி மின்னொளியில் ஜொலித்த குமாரபாளையம் பிரதான சாலைகள்
குமாரபாளையத்தில் பிரதான சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்விளக்குகள் ஜொலித்து வருகிறது.
குமாரபாளையம் நகராட்சி சாலை பாதுகாப்பு பணிக்காக மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும், புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.இ.டி. விளக்குகள் கம்பங்கள் டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு ஒரு கம்பத்திற்கு 2 எல்.இ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.இ.டி. விளக்கு உட்பட மொத்தம் 129 விளக்குகள் புதிதாக அமைக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தீபாவளி திருவிழாவையொட்டி, மின் விளக்கு கம்பங்களில் மின் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து எல்.இ.டி. விளக்குகளும் எரியவிடப்பட்டன. புதிய மின் விளக்குகளின் மின்னொளியில் குமாரபாளையம் பிரதான சாலைகள் அனைத்தும் ஜொலித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu