குமாரபாளையம் லயன்ஸ் சங்கத்தின் இரத்த தானம், கண் சிகிச்சை, பிசியோதெரபி முகாம்கள்

குமாரபாளையம் லயன்ஸ் சங்கத்தின் இரத்த தானம், கண் சிகிச்சை, பிசியோதெரபி முகாம்கள்
X

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம், நாமக்கல் மாவட்ட அகில பரத ஐயப்பா சேவா சங்கம், நகர பா.ஜ.க., ஈரோடு அரசன் கண் மருத்துவ மனை சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இரத்த தானம், கண் சிகிச்சை, பிசியோதெரபி முகாம்கள் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம், நாமக்கல் மாவட்ட அகில பரத ஐயப்பா சேவா சங்கம், நகர பா.ஜ.க., ஈரோடு அரசன் கண் மருத்துவ மனை, ஈரோடு சுப்ரீம் லயன்ஸ் சங்க இரத்த வங்கி, லைப் கேர் பிசியோதெரபி மருத்துவமனை, இணைந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு இலவச முகாம்கள் நடைபெற்றது.

தளபதி லயன்ஸ் சங்க பட்டய தலைவரும், ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலருமான ஜெகதீஸ் தலைமை வகித்தார். இந்த முகாம்களில் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று பயன்பெற்றனர். ஐ.ஒ.எல். லென்ஸ் பொருத்தும் சிகிச்சைக்கு 38 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ரத்த தான முகாமில் 32 பேர் ரத்த தானம் வழங்கினார்கள்.

பா.ஜ.க. மாவட்ட செயலர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொது செயலர் நாகராஜ், மாவட்ட பொருளர் பாலசுப்ரமணி வாழ்த்தி பேசினார்கள். கண் சிகிச்சை முகாமில் டாக்டர்கள் பன்னீர்செல்வம், டாக்டர் ராகினி, பிசியோதெரபி டாக்டர் செந்தில்குமார், உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் பங்கேற்று சேவை செய்தனர். தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலர்கள் செல்வராஜ், சந்திரா, ஐயப்பா சேவா சங்க மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு, பா.ஜ.க. மண்டல தலைவர் ராஜு, நகர பொறுப்பாளர் ரமேஷ், பொது செயலர் கணேஷ்குமார், நகர செயலர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ரத்த தான முகாமில் பா.ஜ.க. நகர செயலர் குமார் 25வது முறையாக ரத்த தானம் வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!