குடிப்பழக்கத்திலிருந்து மீட்க தாயத்து கட்ட சென்றவர் டூவீலரிலிருந்து கீழே விழுந்து பலி
குடிப்பழக்கத்திலிருந்து மீட்க தாயத்து கட்ட சென்றவர் டூவீலரிலிருந்து கீழே விழுந்து பலி
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்ற இருவரில் பின்னால் உட்கார்ந்து சென்ற நபர் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து விழுந்தில் இறந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கூலி வேலை செய்து வந்தவர் சங்கிலி, 50. இவரது நண்பர் ரமேஷ், 45. சங்கிலிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், ஜன. 7, மாலை 03:30 மணியளவில், அவருக்கு தாயத்து கயிறு கட்டுவதற்காக, சங்ககிரி பூமுடி சாமி கோவிலுக்கு, ரமேஷ், தனது யமஹா கிரக்ஸ் வாகனத்தில், ரமேஷ் ஓட்ட, சங்கிலி பின்னால் உட்கார்ந்திருக்க, சேலம் கோவை புறவழிச்சாலை, குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி சங்கிலி கேஈலே விழுந்தார். இதில் பலத்த அடிபட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி சங்கிலி நேற்றுமுன்தினம் மாலை 04:15 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu