காணாமல் போன 6 மரங்களை கண்டுபிடித்து தர வேண்டி நூதன முறையில் மனு!

காணாமல் போன 6 மரங்களை கண்டுபிடித்து தர வேண்டி நூதன முறையில் மனு!
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் காணாமல் போன 6 மரங்களை கண்டுபிடித்து தர வேண்டி தே.மு.தி.க. சார்பில் நூதன முறையில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் காணாமல் போன 6 மரங்களை கண்டுபிடித்து தர வேண்டி நூதன முறையில் மனு கொடுக்கப்பட்டது

குமாரபாளையத்தில் காணாமல் போன 6 மரங்களை கண்டுபிடித்து தர வேண்டி நூதன முறையில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் 6 மரங்கள்அரசு அனும தி இல்லாமல் இரவோடு இரவாக வெட்டப்பட்டு, கொண்டு செல்லப்பட்டன.

இதனால் தே.மு.தி.க. சார்பில் குமாரபாளை யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் வசம், தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் மரக்கிளைகளை உடலில் கட்டிக்கொண்டு நூதன முறையில் மனுக்கள் கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கபடும் என இருவரும் கூறினார்கள்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பெராந்தர் காடு பகுதியில் சில மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் மரக்கன்று நடும் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியில்லாமல் மரம் வெட்டிய நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மரம் நடும் ஆர்வலர் மகாலிங்கம் கூறியதாவது:

வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்பார்கள். இந்த கோடை காலத்தில் மர நிழல் என்பது என்பது அவசியமானது என்பது அனைவரும் அறிந்தது. ஒரு மரக்கன்று கூட வைக்காத நபர்கள், மரங்களை வெட்டியிருப்பது வருத்ததிற்குரியது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மரக்கன்றுகள் நட கற்றுகொடுக்க வேண்டும். பாட புத்தகங்களில் கூட மரக்கன்று நடுதல் அவசியம் குறித்து இடம்பெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரங்களின் முக்கியத்துவம் குறித்து விடியல் பிரகாஷ் கூறியதாவது:

மரங்கள் மற்றும் தாவரங்கள் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியம், ஏனென்றால் அவற்றின் இலைகள் வெளியேறும் ஆக்ஸிஜன் இல்லாமல், பூமியின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும். மரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த அற்புதமான தாவரங்கள் இல்லாமல் கிரகம் ஒரு பாலைவனமாக இருக்கும். ஆனால் அதை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

மரங்கள், குளோரோபில் கொண்ட அனைத்து தாவரங்களையும் போலவே, ஒளிச்சேர்க்கையையும் செய்கின்றன. இதற்கு அர்த்தம் அதுதான் அவை கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியேற்றும், கனிமப் பொருளை கரிமப் பொருளாக மாற்றுவதற்காக.

மேலும் ஒரு நாளைக்கு எவ்வளவு காற்று சுவாசிக்கிறோம்? நாங்கள் நிமிடத்திற்கு 5 முதல் 6 லிட்டர் காற்றில் சுவாசிக்கிறோம், இது 24 மணி நேரத்தில் 7200 முதல் 8600 வரை இருக்கும். நாங்கள் ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறோம். ஒளிச்சேர்க்கைக்கு நேர் எதிரானது. நீங்கள் அதை சொல்லலாம் தாவரங்களும் மனிதர்களும் ஒருவருக்கொருவர் வாழ உதவுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!