குமாரபாளையம் கலிக்கம் சித்த வைத்திய முகாமில் நோயாளிகளுக்கு சிகிச்சை

குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் கலிக்கம் சித்த வைத்திய முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச கலிக்கம் சித்த வைத்திய முகாம் முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
இது பற்றி சித்தா டாக்டர் கார்த்தி கூறியதாவது:-
உடம்பில் உள்ள நோய்களை மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சை கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல் சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்புகள், தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல் லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்த வைத்தியத்தின் பலன்கள் குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது:-
தனது வெண்ணிறச் சிறு மலர்களைத் தேடி, வண்டுகளையும் பட்டாம்பூச்சிகளையும் வரவழைக்கும் தந்திரம் தெரிந்த சிறிய தாவரம் தும்பை. நோய்களைத் தடுக்கும் ‘மூலிகைத் தந்திரன்’. அதன் பூவிலிருந்து தேனை உறிஞ்ச, வண்டுகளோடு போட்டி போட்டுக்கொண்டு இளம்பிராயத்தில் தும்பைச் செடிகளைத் தேடி அலைந்த நினைவுகள் பலருக்கும் இருக்கலாம்.
போரில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் தும்பையின் அழகிய பூங்கொத்தைச் சூடிக்கொள்வார்களாம். போரிடும் இருவருமே தூய்மையானவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. எதிராளியும் தூய்மையானவர் என்பதைக் குறிக்க, ‘தும்பைப் பகைவர்’ என்கிறார் குமட்டூர் கண்ணனார். ‘தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ எனக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.
பசுமையான தும்பை இலைகளை அவ்வப்போது சமையலில் சேர்த்துவர, சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் துன்பப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. இதன் இலைகள் மற்றும் பூக்களை உலர்த்தி வைத்துக்கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட, நாட்பட்ட இரைப்பு நோயின் தீவிரம் விரைவில் குறையும். நாவறட்சி ஏற்பட்டு, அதிக தாகம் இருக்கும்போது, தும்பையின் பூக்களை, தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்துப் பானமாகப் பருக, வறட்சி குறைந்து நா மலரும்.
பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம் பழத்துடன் கலந்து சுவைக்க, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், நுரையீரல் பாதையில் சிறைப்பட்டிருக்கும் கோழையும் வெளியேறும். தும்பைச் செடியை உலர்த்திச் சூரணமாக்கி, நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர, ரத்தச் சோகை குணமாகும்.
இவ்வாறுெஅவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu