குமாரபாளையம் காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

குமாரபாளையம் காளியம்மன் கோவில் பூட்டை   உடைத்து கொள்ளை முயற்சி
X

குமாரபாளையம் காளியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசித்திருவிழாவில் மகா குண்டம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, வாண வேடிக்கை என களைகட்டும் திருவிழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரளும் கோவில் ஆகும்.


இந்த கோவிலின் அர்ச்சகர் சதாசிவம் நேற்று காலை வழக்கம் போல் 06:00 மணியளவில் கோவில் திறக்க வந்தார். கோவிலின் பக்கவாட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணம் திருடப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி கூறுகையில் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. பணம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
why is ai important to the future