சிறப்பாக நடந்த குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்தது.
குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்த போது, வழி நெடுக பக்தர்கள் திரண்டு வந்து வணங்கினர்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:-
குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேரில் சில பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டன. இதனால் தேரோட்டம் நிறைவாக நடக்கும் முன்பு, ஒரு முறை வெள்ளோட்டம் விடப்படுவது வழக்கம். இதற்காக கோவில் வளாகத்திலிருந்து தேரின் கீழ் பாகம் மட்டும் வெள்ளோட்டம் விடப்பட்டது. எவ்வித அலங்காரமும், அம்மன் விக்ரகமும் இல்லாமல் தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர். வழிநெடுக பக்தர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றியும், மலர்கள் தூவியும் வழிபட்டனர். ராஜா சாலை, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி வழியாக கோவில் வளாகத்தில் நிறைவுற்றது. வழக்கமாக இந்த வீதிகளின் வழியாகத்தான் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பிப். 20ல் மறு பூச்சாட்டு, பிப். 21ல் கொடியேற்றம் முடிந்து, பிப். 27ல் அம்மனுக்கு தீர்த்தக்குட புனித நீர் ஊற்றுதல், தேர் கலசம் வைத்தல், காவேரி ஆற்றுக்கு சென்று சக்தி அழைத்து வருதல், பிப். 28ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் விழா, அலங்கார ஆராதனை, பிப். 29ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டிவேடிக்கை, மார்ச். 1ல் தேர் நிலை அடைதல், நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் திருவீதி உலா, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 3ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகியன நடைபெறவுள்ளன. தக்கார் வடிவுக்கரசி, செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் விழாக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu