ஜே.கே.கே. நடராஜா பொறியியல் கல்லூரி 16வது ஆண்டு விழா; KPY பாலா பங்கேற்பு
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா பொறியியல் கல்லூரி 16வது ஆண்டு விழாவில் நடிகர் KPY பாலா பங்கேற்ரார்.
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா பொறியியல் கல்லூரி 16வது ஆண்டு விழாவில் KPYநடிகர் பாலா பங்கேற்றார்.
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா பொறியியல் கல்லூரியின் 16வது ஆண்டு விழா தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா தலைமையில் நடந்தது. திரைப்படம் மற்றும் டி.வி. நிகழ்ச்சி நடிகர் KPY பாலா, ஆகாஷ் ஜெகன்னாதன் பங்கேற்று, பலகுரல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, மாணவ, மாணவியர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி, நகைச்சுவை சொல்லுதல், பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தினார். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் என பலதரப்பட்ட சாதனயாளர்களுக்கு பாலா, ஓம்சரவணா ஆகியோர் பரிசு, சான்றிதழ்கள் மற்றும் விருது வழங்கி பாராட்டினர்.
விழாவில், KPYபாலா பேசியதாவது:
மாணவ, மாணவியர் நன்கு படித்து சாதித்து காட்ட வேண்டும். எத்தனையோ இளைஞர்கள் படிக்க வாய்ப்பு இல்லாமல் வேலைக்கு சென்று வருகின்றனர். நான் கூட சென்னை கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடம் எடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாக பாதியில் நிற்கும் நிலை வந்தது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால், எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள். நான் வெற்றி பெற்றும் அவமானப்பட்டேன். உன் முகத்திற்கு விருது தேவையா? உனக்கு இதை பெற என்ன தகுதி உள்ளது? என, தாக்கியும் உள்ளனர். இந்த துன்பத்தை கண்ணீருடன் நானே கொண்டாடி, மன உறுதியுடன் பாடுபட்டு, பல நிகழ்சிகளில் பங்கேற்று, 12 வருடங்களுக்கு பின் தற்போது இந்த நிலையை அடைந்து உள்ளேன். ஏன் அதிகம் சினிமாவில் நடிக்கவில்லை என்று கேட்டீர்கள்.
உனக்கும் ஒரு படம் வரும், காலம் வரும், பொறுத்து இரு, என பாலாஜி கூறினார். தற்போது ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க உள்ளேன். அவரும் நானும் சேர்ந்து மே. 1 முதல் மாற்றம் என்ற அமைப்பு உருவாக்கி, உதவி என்று கேட்கும் அனைவருக்கும் உதவி செய்வது என முடிவு செய்துள்ளோம். ஆம்புலன்ஸ் வழங்குதல், கல்விக்கு உதவுதல், மருத்துவ சிகிச்சைக்கு உதவுதல், ஆதரவற்றோர் மையங்களுக்கு உதவுதல் என்பது உள்ளிட்ட, என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
KPY பாலா இதுவரை சாதித்த சாதனைகள், செய்த உதவிகள் ஆகியவை டி.வி.யில் ஒளிபரப்பு செய்யபட்டது. மாணவ, மாணவியர் கைககள் தட்டி உற்சாகப்படுத்தினர்.
கல்லூரி முதல்வர் சிவக்குமார், நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன், பேராசிரிய பெருமக்கள், ஜே. ஜே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu