குமாரபாளையம் கடைவீதியில் கொட்டிக்கிடக்கும் ஆயுதபூஜை கழிவு பொருட்கள்

குமாரபாளையம் கடைவீதியில் கொட்டிக்கிடக்கும்    ஆயுதபூஜை கழிவு பொருட்கள்
X

குமாரபாளையம் கடைவீதியில் அகற்றப்படாமல் கிடக்கும் வாழைக்கன்றுகள்.

குமாரபாளையம் கடைவீதியில் ஆயுதபூஜை கழிவு பொருட்கள் கொட்டிக்கிடப்பதை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. `

குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன.

ஆயுதபூஜை, விஜயதசமி, நவராத்திரி என தொடர்ந்து விஷேச நாட்கள் வந்ததால், பொதுமக்கள் வாழைக்கன்றுகள், மாவிலை கொத்துகள், உள்ளிட்ட பூஜை பொருட்கள் வாங்கி இறைவனை வழிபட்டனர். இதற்காக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குமாரபாளையம் நகரின் பல இடங்களில் வாழைக்கன்றுகள், மாவிலை கொத்துகள் குவித்து வைத்திருந்தனர். நேற்றுடன் பூஜா நாட்கள் நிறைவு பெற்றதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்றுகள், மாவிலை கொத்துகள் ஆகியவை, விற்றது போக மீதியானவைகளை அந்தந்த இடத்தில் அப்படியே விட்டு சென்றனர்.

இதனை அகற்ற வேண்டிய பணி தற்போது நகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது. வார்டுகளில் உள்ள குப்பைகளை அகற்றவே நேரம் இல்லாமல், போதிய பணியாட்கள் இல்லாமல், அனைத்து வார்டு கவுன்சிலர்கள் நகரமன்ற கூட்டத்தில் புகார்கள் மேல் புகார்கள் கூறி, நகராட்சி நிர்வாகத்தை திகைக்க வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த கழிவுகளை யார் அகற்றுவது? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது போன்ற கடைகள் போடும்போது, நகராட்சி சார்பில் குத்தகைதாரர்கள் வரி வசூலிக்கும் போதே, அவர்கள் முகவரி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும், அல்லது, இது போன்ற கடைகள் போடுபவர்கள் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்து, கடை அமைக்க சில நாட்கள் முன்பே முறையான அனுமதி பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போது, வியாபாரம் ஆகாத கழிவு பொருட்களை நாங்களே எங்கள் சொந்த செலவில் அகற்றி விடுகிறோம் என, எழுத்து பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Tags

Next Story