குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம் காணொலி மூலம் திறப்பு

குமாரபாளையம் புதிய தாலுகா   அலுவலகம் காணொலி மூலம் திறப்பு
X

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள்.

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.

குமாரபாளையத்தில் தாலுகா அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு கட்டிடங்கள் ரூ. 3.44 கோடி மதிப்பில் 19 ஆயிரத்து 379.34 சதுரடியில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம், குடிமைப் பொருள் வழங்கல் திட்டங்கள், நில அளவை மற்றும் அனைத்து சான்றுகளும் வழங்குவது உள்ளிட்ட பணிகள் செயல்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திறப்பு விழாவையொட்டி தாலுகா அலுவலகம் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆர்.டி.ஓ. சுகந்தி, குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி தலைவர்கள் விஜய்கண்ணன், செல்வராஜ், தெற்கு நகர செயலர் ஞானசேகரன், ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவன தாளாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தாசில்தார் தலைமையில் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:-

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நிலம், எலந்தகுட்டை பகுதியில் உள்ளது. இங்கு, பள்ளிபாளையத்தில் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்ய, பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பலர் அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. கழிவுநீருடன், சாயக்கழிவு நீரும் சேர்ந்து வருவதால், இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம், இங்குள்ள நிலத்தடி நீர் மாசுபடும், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கு பிளாண்ட் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ.க்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மீண்டும் ஒரு தேதியில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!