மாவட்ட அளவிலான தடகள போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் சாம்பியன்

மாவட்ட அளவிலான தடகள  போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் சாம்பியன்
X

நாமக்கல் மாவட்ட அளவிலாள தடகள போட்டியில் சாதனை படைத்த குமாரபாளையம் அரசு பள்ளி மாணவிகள்.

நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவியர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் செல்வம் கல்லூரியில் இரண்டு நாட்களாக நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். போட்டியை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்கள் குடியரசு தின போட்டியை துவக்கி வைத்தனர். ஒலிம்பிக் கொடியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் ஏற்றி வைத்தார். மாவட்ட கொடியை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்.ராமலிங்கம் ஏற்றி வைத்தார். பள்ளிக் கொடியை செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ் ஏற்றி வைத்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் இருந்து 14 ,17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் 300 பேர் கலந்து கொண்டனர்.

இதில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி குமாரபாளையம் மாணவிகள் 66 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். இதில் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கனிஷ்கா எட்டாம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார்/

Tags

Next Story