குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு மாணவர் சேர்க்கை

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பு மாணவர் சேர்க்கை
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மாணவர் சேர்க்கையினை கல்லூரி முதல்வர் ரேணுகா துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டது. இதுவரை 9 ஆயிரத்து 896 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான உதவி மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மே 9ல் கல்லூரி முதல்வர் ரேணுகா துவக்கி வைத்தார். நேற்று சிறப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது.

இது குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா கூறியதாவது:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2013ம் ஆண்டில் துவக்கப்பட்டது. இதில் இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கை துவங்கியது.

பி.ஏ, தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.காம், பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை 9 ஆயிரத்து 896 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது எங்கள் கல்லூரிக்கு மிக பெருமையான விஷயம். தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களான, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடந்தது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன், 10ல் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?