குமாரபாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை

குமாரபாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை
X

படவிளக்கம் : குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.

பாண்டமங்கலம் தனியார் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான பீச் வாலிபால் போட்டியில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதே போல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டியில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று, திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை தலைமை ஆசிரியர் ஆடலரசு, என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!