குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்   விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உடல் நலம் குறித்த விழிப்புணர்வு முகாமில் டாக்டர் நடராஜ் பேசினார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பன் தலைமை வகித்தார். பவானி அசோக் கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் நடராஜன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசும்பபோது மாணவர்கள் உடல்நலத்தை பேணி பாதுகாக்க வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமே கல்வி கற்க உதவும். சத்தான உணவு உண்ண வேண்டும். சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இலவச நீட் வகுப்பு பள்ளியில் நடத்தப்படும் என்றார்.இதில் விடியல் பிரகாஷ் , ஆசிரியர்கள் கதி, சிவகுமார், மணிகண்டன், மாலதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!