குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
X
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 172 பேர் தேர்வு எழுதியதில் 171 பேர் தேர்ச்சி பெற்றனர். வர்ஷினி, 541, நிவேதா 534, ஜனனி 534, சக்தி 532, மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வில் 245 பேர் தேர்வு எழுதியதில் 16 பேர் தேர்வுக்கு வரவில்லை. திவ்யா 490, மதுமிதா 481, ரித்திகா மற்றும் ஜெயஸ்ரீ 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 189 பேர் தேர்வு எழுதியதில் 175 பேர் தேர்ச்சி பெற்றனர். காவியன் 558, சந்துரு 543, மவுலிதரன், மற்றும் அருள்ராஜ் 524 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 500க்கு மேல் 9 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வில் 253 பேர் தேர்வு எழுதியதில் 213 பேர் தேர்ச்சி பெற்றனர். பாலமுருகன் 480, கிருஷ்ண பிரசன்னா 465, இளைய பாரதி 455 மதிபெண்கள் பெற்றுள்ளனர். 400க்கு மேல் 11 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களை தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சிவகாமி உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவர்கள் பாராட்டினர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா