குமாரபாளையம் அரசு பள்ளி, பிளெக்ஸ் விளம்பரம் செய்து அசத்தல்

குமாரபாளையம் வாசுகி நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கைகாக பிளெக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. (பவர் ஹவுஸ் அருகில்)
குமாரபாளையம் வாசுகி நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைகாக பள்ளி சார்பில் பிளெக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம் கூறியதாவது;
தனியார் பள்ளி, கல்லூரிகள் மட்டுமே விளம்பரம் செய்து மாணவ, மாணவியர்களை சேர்த்து வந்தனர். அரசு பள்ளியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பது பலரும் அறியாத நிலை உள்ளது.
இதனை அறியச் செய்திடும் வகையில் எங்கள் பள்ளி சார்பில் பிளெக்ஸ் வைத்து விளம்பரம் செய்துள்ளோம். இதில் எல்.கே.ஜி. முதல் 6ம் வகுப்பு வரை ஆங்கில கல்வி, 1 முதல் 8 வரை தமிழ்வழி கல்வி, காற்றோட்டமான வகுப்பறை, விசாலமான விளையாட்டு திடல், சிறப்பான அறிவியல் ஆய்வகம், நூலகம், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு, டி.வி., கணினி, மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள், தனி டைனிங் ஹால் வசதி,
செயல்முறை கற்றல் முறையில் கல்வி, அனுபவமிக்க ஆசிரியர்கள், சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வசதி, கராத்தே, யோகா, சிலம்ப பயிற்சிகள், நன்னெறி கல்வி, சசுகாதாரமான கழிவறை வசதி,இயற்கை சூழலில் அமைந்த பள்ளி, கல்வி உதவித்தொகை உடனுக்குடன் பெற்றுத்தரப்படுகிறது, செல் எண்கள்: 98428 91071,73737 79977. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu