பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்
X

பைல் படம்

குமாரபாளையம் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் தலைமை ஆசிரியை சிவகாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கு வராமல் இடை நின்ற மாணாக்கர்கள் குறித்து நேரடியாக சென்று கருத்து கேட்டு மீண்டும் பள்ளிக்கு வர வைத்தல், 8ம் வகுப்பு தேர்வில் 300 ரூபாய் கல்வி உதவி தொகை பெறுதல், பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி படிப்புக்கு சென்றவர்கள் கல்வி உதவித்தொகை ஆயிரம் பெறுதல் குறித்து ஆலோசனை வழங்குதல், பள்ளியில் சுற்றுச்சுவர், கழிப்பிடம், சைக்கிள் ஸ்டாண்ட், வகுப்பறை, ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கனகலட்சுமி உள்ளிட்ட மேலாண்மைக்குழு உருப்பினர்கள் பங்கேற்றனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!