குமாரபாளையம் அரசு நூலகத்தில் சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா

குமாரபாளையம் அரசு நூலகத்தில் சேவை செய்தவர்களுக்கு   பாராட்டு விழா
X

குமாரபாளையம் அரசு நூலகத்தில் சேவை செய்தோருக்கு நடந்த பாராட்டு விழாவில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், இன்ஸ்பெக்டர் தவமணி சான்றிதழ்கள் வழங்கினர்.

குமாரபாளையம் அரசு நூலகத்தில் சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

குமாரபாளையம் அரசு நூலகத்தில் சேவை செய்தோருக்கு பாராட்டு விழா நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு நூலகம் பள்ளிபாளையம் சாலை, எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுப்புற பகுதியை தூய்மை செய்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் சில செய்து, நூலக வளர்ச்சிக்கு உதவிய தளபதி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவிற்கு நூலகர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி, குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று சேவை செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர்.

போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்கள் படித்து பயன்பெற, பகுதி நேர நூலகமாக செயல்படும் இந்த நூலகத்தை காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை செயல்படும் முழுநேர நூலகமாக மாற்றியமைக்க மாவட்ட நூலகர் தேன்மொழியிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சென்னை தலைமையக அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு, விரைவில் முழு நாள் நூலகமாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்போது மாவட்ட நூலக அதிகாரி தேன்மொழி உறுதி கூறினார்.

இந்நிகழ்வில் இன்ஸ்பெக்டர் தவமணி பேசும்போது மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்லூரியில் படிக்கும் இந்த தருணத்தில், நாம் இந்த பதவியில் அமர வேண்டும் என்ற கனவினை மனதில் விதைத்து, அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பு உங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என்றார்.

இதில் திருச்செங்கோடு நூலகர் சுமதி, சித்தனந்தூர் நூலகர் சிவராமன், தளபதி லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், சங்க தலைவர் மாதேஸ்வரன், வாசகர் வட்ட தலைவர் பிரகாஷ், கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!