குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் குழு ஆய்வு..

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் குழு ஆய்வு..
X

ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழுவினருடன் குமாரபாளையம் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மாநில அரசு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், மருத்துவமனையில் கூடுதல் அடிப்படை வசதிகள் வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டமாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, மாநில அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழுவினர் அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக் குழுவில், மருத்துவர்கள் வசந்தா மஞ்சு, ரசீக் பரீத், செவிலியர் ஷகிலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆய்வின்போது, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி உடனிருந்தார். மாநில அதிகாரிகள் குழுவினரின் ஆய்வு குறித்து குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி கூறியதாவது:

தேசிய தர உறுதி சான்று குழுவினர் பல்வேறு கட்டமாக ஆய்வு செய்ததுடன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கினர். தற்போது மாநில ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனையில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்த படுக்கை வசதி எத்தனை? தூய்மை பணிகள், சிகிச்சை செய்வது, பதிவேடுகள், செவிலியர் திறனாய்வு என்பது உள்ளிட்ட பல ஆய்வுகள் செய்தனர் என தலைமை மருத்துவர் பாரதி தெரிவித்தார்.

தொடர்ந்து, ஆய்வு மேற்கொண்ட மாநில அதிகாரிகள் குழுவினருடன் குமாரபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....