குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாளை கலந்தாய்வு துவக்கம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாளை கலந்தாய்வு  துவக்கம்
X

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி. (பைல் படம்)

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (23ம் தேதி) கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது என்று பொறுப்பு முதல்வர் ரகுபதி தெரிவித்தார்.

இது பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரகுபதி (பொ) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022 கல்வியாண்டிற்கு பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய இளநிலை பாடப் பிரிவுகளுக்கு

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு . 23 ம் தேதி காலை 09:30 மணிக்கு சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கும், அதை தொடர்ந்து பிற மாணவர்களுக்கும் நடைபெற இருக்கிறது.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இணைய வழியில் பதிவு செய்த மாணவர்கள் ஆக. 23ல் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். .இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!