குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2 எப்., 12 பி. அந்தஸ்து

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2 எப்., 12 பி. அந்தஸ்து
X

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பல்கலை., மானிக்குழு 2 எப்., 12 பி. அந்தஸ்து வழங்கியுள்ளது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2 எப்., 12 பி அந்தஸ்து பெற்றுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா கூறுகையில், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 5 ஆண்டுக்கு முன் துவங்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தின் நிரந்தர இணைவும் பெற்றுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன்) டெல்லி, சார்பில் கிடைக்கப்பெற வேண்டிய, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2 எப்., 12 பி. அந்தஸ்து கிடைக்கப்பெறாமல் காலதாமதமாகி வந்தது. தற்போது இந்த அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.

இதன் மூலம் மத்திய அரசின் நிதி கல்லூரிக்கு கிடைக்கப்பெறும். திட்டங்களை செயல்படுத்த நிதியுதவியும் கிடைக்கப்பெறும். இதனால் கல்லூரி மேலும் வளர்ச்சி பெறும். இந்த உயரிய அந்தஸ்து இந்த கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றதால் பேராசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!