/* */

குமாரபாளையம் அரசு கலை & அறிவியல் கல்லூரியில் தொடரும் 2ம் நாள் கலந்தாய்வு

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் நாள் கலந்தாய்வு நாளை (24-08-21) நடைபெறுகிறது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கலை & அறிவியல் கல்லூரியில்   தொடரும் 2ம் நாள் கலந்தாய்வு
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் (பொ) ரகுபதி தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வு குறித்து, கல்லூரி முதல்வர் ரகுபதி (பொ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021 - 2022 கல்வியாண்டிற்கு பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய இளநிலை பாடப் பிரிவுகளுக்கும், சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பிற மாணவர்களுக்கும் நடைபெற்றது.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணையதளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இணைய வழியில் பதிவு செய்த மாணவர்கள் ஆகஸ்ட் 24ல் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து 2ம் நாள் கலந்தாய்வில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்லூரியில் இன்று நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இரவு 9 மணி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!