குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்ப பதிவு துவக்கம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில்  விண்ணப்ப பதிவு துவக்கம்
X
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பப் பதிவு துவங்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்ப பதிவு துவங்கப்பட்டது.

இது பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு இளநிலை பாட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்களை ஜுன் 22 முதல் ஜூலை 7 வரை www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம். பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. விண்ணப்ப கட்டணம் 50.00 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதிவு கட்டணம் 2:00 ரூபாய் மட்டும். கல்லூரி தொடர்பான தகவல்களுக்கு 04288--- 263121 என்ற தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன், மடிகணினி மூலமாக விண்ணபிக்கலாம். இம்முறையில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் தங்கள் வீடு அருகில் உள்ள ஈ.சேவை மையங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் மாவட்ட சேவை மையங்களில் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் உடனே அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து, கல்லூரியில் செயல்பட்டு வரும் கல்லூரி சேர்க்கை உதவி மையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!