குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி பரிசு வழங்கி பாராட்டினார்.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா, விளையாட்டு விழா மற்றும் கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. முத்தமிழ் விழாவில் கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் எஸ்.ஐ. மலர்விழி பரிசுகள் வழங்கி பாராட்டினார். கல்லூரி ஆண்டுவிழாவில் தனித்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், மரக்கன்றுகள் வைத்தவர்கள், விடுப்பு எடுக்காதவர்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு பி.எட்.கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் தமிழ்த்துறை தலைவர் ஞானதீபன், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சரவணாதேவி, ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கீர்த்தி, பேராசிரியர்கள் ரகுபதி, ரமேஷ்குமார், தட்டான்குட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து, குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர் சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai healthcare products