குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி நிறைவு விழா, பிரிவு உபசார விழா

குமாரபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி நிறைவு விழா, பிரிவு உபசார விழா
X

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளியில் நடைபெற்ற பள்ளி நிறைவு விழா மற்றும் பிரிவு உபசார விழா.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளி நிறைவு விழா மற்றும் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளி நிறைவு விழா மற்றும் பிரிவு உபசார விழா தலைமையாசிரியை சுகந்தி தலைமையில் நடைபெற்றது.

இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ், நிர்வாகி லெவி ஆகியோர் பேசுகையில்,மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்த கல்வி வழி நின்று, பெற்றோர்களுக்கு பெருமையை தேடி தர வேண்டும். நம் பெற்றோர்கள் கூலி தொழிலாளர்களாக இருந்தாலும் நம்மை படிக்க வைக்க அயராது உழைக்கும் அவர்களை வாழ்வின் இறுதி காலம் வரை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளையாட்டு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்மானுவேல் ஆலய நிர்வாகி ஜேம்ஸ் விஜய் சாந்தப்பன், கவுன்சிலர் கனகலட்சுமி கதிரேசன், ஆசிரியைகள் ஹெலன் பிரிசில்லா, ஜாய்ஸ் அருள்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சிகளுக்கு பயிற்சியளித்த ஸ்டெல்லா, மெர்சிபா குளோரி, ராணி, சித்ரா ஆகியோருக்குக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும், 8ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business