திண்டுக்கல் விழாவில் குமாரபாளையம் மகளிருக்கு விருது
திண்டுக்கல் மகளிர் தின விழாவில் குமாரபாளையம் சமூக சேவகர் சித்ராவிற்கு விருது வழங்கப்பட்டது.
மகளிர் தினத்தையொட்டி திண்டுக்கல் ஆதவன் உலக செம்மொழிச் சங்கம் உள்ளிட்ட சேவை அமைப்புகள் சார்பில் சிறந்த சேவை செய்த மாநில அளவிலான மகளிருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சமேஸ்வரி தலைமை வகித்தார்.
இந்த விழாவில் குமாரபாளையம் சமூக சேவையாளர் சித்ரா விருது பெற தேர்வு செய்யப்பட்டார். இவர் குமாரபாளையம் பகுதியில் வடிகால், மின் விளக்கு, சேதமான தார் சாலை பழுது நீக்குதல், குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்தல், குடிநீர் விநியோகம் சீராக நடக்க முயற்சி மேற்கொள்ளுதல், ரத்ததானம் செய்தல், ரத்ததானம் வேண்டுவோருக்கு, பல குழுக்களை தொடர்பு கொண்டு, ரத்ததானம் செய்ய, பயனாளிகள் குறிப்பிடும், குறிப்பிட்ட ஊருக்கு, குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு ஆட்களை அனுப்பி வைத்தல், கல்வி உதவி கிடைக்க செய்தல், ஆதரவற்ற மையங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்துவருகிறார்.
இவருக்கு விழாக்குழுவினருடன், சின்னத்திரை நட்சத்திரங்கள் திவாகர், தங்கத்துரை, பழனி பட்டாளம், நாஞ்சில் விஜயன், காயத்ரி, தர்ஷினி, அருண்பாண்டி ஆகியோர் பங்கேற்று விருது வழங்கி கவுரவப்படுத்தினர்.
நடனம், மேஜிக் நிகழ்ச்சி, பலகுரல் நிகழ்ச்சிகள், உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அழிந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் விளையாட்டினை சிறுவர்கள் செய்து காட்டினர். விருது பெற்ற சித்ராவிற்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu