வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கம்

வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கம்
X

குமாரபாளையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் சாலையில் மழை நீர் வெள்ளமென ஓடியது 

குமாரபாளையத்தில் வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர்.

குமாரபாளையத்தில் வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர்.

குமாரபாளையம் மட்டும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. அமாவாசை விடுமுறை என்பதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது. பெரும்பாலும் பொதுமக்கள் இரவு 07:00 மேல் மேற்சொன்ன கடைகள் மற்றும் இதர கடைகளுக்கு அதிகம் வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு 07:00 மணியளவில் தொடங்கிய கன மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நேற்று அமாவாசை என்பதால் பொதுமக்கள் அதிகம் வருவார்கள் என்று ஆவலுடன் அனைத்து வியாபாரிகளும் காத்திருந்த நிலையில் இந்த மழையால் அவர்களின் வியாபாரம் பெரிதும் பாதித்தது. பல இடங்களில் விநாயகர் சிலை கடைகளும் போட்டிருந்தனர். அவர்களும் அவரசம், அவசரமாக சிலைகளை தார்பாய் கொண்டு மூடி வைக்கும் நிலை ஏற்பட்டது. சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.


Tags

Next Story
ai marketing future