குமாரபாளையம் திமுக உட்கட்சி தேர்தல் முடிவுகள்: 2 நாட்களில் வெளியீடு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட மேலிட பார்வையாளர்கள்.
குமாரபாளையம் நகர 33 வார்டு பொறுப்பாளர்களுக்கான தி.மு.க. உட்கட்சி தேர்தலில், ஏப்ரல் 22 ம் தேதி வேட்புமனு தாக்கல், ஏப். 27ல் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஒப்படைத்தல் ஆகியன நடைபெற்றன.
தி.மு.க. உள்கட்சி தேர்தல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில், மேலிட பார்வையாளர்கள், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளரும், வழக்கறிஞருமான கிரிசங்கர், குத்தாலம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பெற்றுகொண்டனர்.
இதுகுறித்து நகர பொறுப்பாளர் செல்வம் கூறுகையில், பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இன்னும் 2 நாட்களில் உட்கட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன என அவர் தெரிவித்தார்.
குமாரபாளையத்தின் 33 வார்டுகளில் நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு கொடுத்தவர்கள் அனைவரும் தேர்தல் முடிவிற்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu