குமாரபாளையம் விடியல் ஆரம்பத்தினர் காவலர் தின விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் விடியல் ஆரம்பத்தினர் காவலர் தின விழா கொண்டாட்டம்
X

 குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் காவலர் தின விழா கொண்டாடப்பட்டது.  

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் இனிப்பு வழங்கி காவலர் தின விழா கொண்டாடினர்.

குமாரபாளையம் கோட்டைமேடு, சேலம்-கோவை புறவழிச்சாலை பகுதியில் உள்ள போக்குவரத்து காவல் அலுவலகத்தில் காவலர் தினவிழா கொண்டாடப்பட்டது.

விடியல் ஆரம்பம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் ஹேமலதாவுக்கு அமைப்பாளர் பிரகாஷ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல் போலீஸ் எஸ்.ஐ. வெங்கடேசன், எஸ்.எஸ்.ஐ. சண்முகம், தலைமை காவலர்கள் பழனி, சுகுமார், மனோகர், ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story