வேலைக்கு சென்ற பெண் மாயம் உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

குமாரபாளையத்தில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஓட்டன்கோயில் பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி (வயது 70.).கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் செல்லம்மாளின் கணவர் இறந்ததால், தன் தாயுடன் வசித்துகொண்டு கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 08:00 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து தாய் சரஸ்வதி, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்படி, குமாரபாளையம் போலீசார் காணமல் போன செல்லம்மாளை தேடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி வி. மேட்டூர் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முருகேசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்து உள்ளது. இந்நிலையில் முருகேசன் என்பவர் மீது போடப்பட்டுள்ள வழக்கானது மிகவும் சாதாரண வழக்காக உள்ளது.குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிவிடும் நிலையில் உள்ளது.
மேலும் இவ்வளவு பெரிய குற்ற பின்னணிகளுக்கு பின்னால் ஒரு கும்பல் செயல்பட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுவாக உள்ளது. எனவே வி. மேட்டூர் பகுதியில் உள்ள பெண்களும் பொதுமக்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ள முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்த வழக்கை முழுமையாக தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லங்காட்டுவலசில் தனேந்திரன் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெருமாள், சமூக செயல்பாட்டாளரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன், வி மேட்டூர் பகுதியை சேர்ந்த முருகன், பழனிச்சாமி, செங்கோடன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொழிலாளி உயிரிழப்பு
குமாரபாளையம் எதிர்மேடு பகுதியில் வசிப்பவர் விஜயகுமார்,( 41.) விசைத்தறி கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணி சிப்ட்டுக்கு போக வேண்டும் எனக்கூறி, வீட்டில் மாலை 05:00 மணியளவில் தூங்க சென்றுள்ளார். இவரது அம்மா இவரை மாலை 06:50 மணியளவில் எழுப்ப சென்ற போது, வாயில் நுரை தள்ளியபடி படுத்திருந்தார். இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டிய போது, இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என டாக்டர் கூறினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu