லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று குமாரபாளையம் அருகே கோட்டைமேடு, ஆலாங்காட்டுவலசு பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. நேரில் சென்ற போலீசார் போலி லாட்டரி விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், (39), பாபு, (48), ஆகிய இருவரை கைது செய்தனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து, நெம்பர்கள் எழுதப்பட்ட ஏழு துண்டு சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் ஜே.கே.கே. பங்களா பின்புறம், வட்டமலை உணவு விடுதி அருகில், பள்ளிபாளையம் சாலை உணவு விடுதி அருகில் ஆகிய இடங்களில் மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாலன், (68), பூமிநாதன், (47), இளங்கோ, (45), மாதேஸ்வரன், (64), ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu