தொழிலாளியை தாக்கிய மூவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

தொழிலாளியை தாக்கிய மூவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
X
தொழிலாளியை தாக்கிய மூவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி (வயது47). கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது 17 வயது மகள், நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில், காட்டுப்பக்கம் சென்று வருவதாக கூறிச் சென்றார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில், காணாமல் போன தன் மகளை மீட்டுத் தருமாறு ராமசாமி புகார் மனு கொடுத்துள்ளார். இவரது புகாரின் படி காணாமல் போன இவரது மகளை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் வேறு பேக்டரிக்கு வேலைக்கு போனதற்கு, விசைத்தறி தொழிலாளியை அடித்து, உதைத்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் உழவர் சந்தை பின்புறம் வசிப்பவர் ஒபுளிராஜ் (வயது39). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர், தான் வேலை செய்த ராகு தறி பட்டறையிலிருந்து, குப்புராஜ் என்ற தறி பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில், காவேரி நகர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் இவர் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குணா, (26), சரவணன், (21), கார்த்திக், (33), ஆகிய மூவரும் வலுக்கட்டாயமாக டூவீலரில் அழைத்து சென்றனர். காவேரி நகர் புளியமரம் அருகே இறக்கி விட்டு, எதற்காக வேறு தறி பட்டறைக்கு வேலைக்கு போனாய்? என கேட்டு கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த ஒபுளிராஜ், குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து இவர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story