மது குடிக்க அனுமதித்தவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

குமாரபாளையத்தில் ஓட்டல் கடையில் மது குடிக்க அனுமதித்த நபர் கைது உள்ளிட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
குமாரபாளையம் நகரில் பல ஓட்டல் கடைகளில் மது குடிக்க அனுமதிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எஸ்.ஐ. சந்தியா தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் சேலம் சாலை, கோட்டைமேடு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சேலம் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் கடையில், சிலர் மது குடித்துக்கொண்டு இருந்தனர். இதற்கு அனுமதி கொடுத்த நிர்வாகி மாசிலாமணி (வயது48,) என்பவர் கைது செய்யப்பட்டார். குமாரபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே டூவீலர் நிலைதடுமாறி டிவைடர் மீது மோதியதில் இருவர் பலத்த காயமடைந்தனர். சேலம் மாவட்டம், சின்ன திருப்பதியை சேர்ந்தவர் விஜயகிருஷ்ணன்,( 51. மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரும் இவரது நண்பரான அதே தொழில் செய்து வரும் சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி, (63,) ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் மாலை 03:40 மணியளவில், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில், கோட்டைமேடு பகுதியில் வந்த போது, விஜயகிருஷ்ணன், ராயல் என்பீல்டு டூவீலரை ஓட்ட, ராமசாமி பின்னால் உட்கார்ந்து வந்தார். அப்போது நிலைதடுமாறி டிவைடர் மீது மோதியதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். இவர்கள் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே நடந்து சாலையை கடந்தவர் மீது டூவீலர் மோதி பெண் பலத்த காயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதியில் வசிப்பவர் கருப்பாயி,( 60.) இவர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் சேலம், கோவை புறவழிச்சாலை, வட்டமலை பஸ் நிறுத்தம் பகுதியில், சாலையை நடந்து கடக்கும் போது, சேலம் பக்கமிருந்து கோவை நோக்கி சென்ற டி.வி.எஸ். ரெய்டர் வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில், டூவீலரை ஒட்டி வந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பணக்கம்மொட்லு பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் சிங்காரவேல், 23, என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் சேலம் சாலை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. சந்தியா உள்ளிட்ட போலீசார் சேலம் சாலை, ஆனங்கூர் பிரிவு அருகில் நேரில் ஆய்வு செய்தனர். அங்கு ஹான்ஸ் பாக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம், 36, என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிமிருந்து 4 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu