குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!

குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!
X

குமாரபாளையம் கிரைம் செய்திகள் (கோப்பு படம்)

குமாரபாளையம் பகுதியில் நேற்று நடந்த கிரைம் செய்திகளை பார்ப்போம் வாங்க.

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

பாம்பு கடித்து பெண் பலி

குமாரபாளையம் அருகே பாம்பு கடித்து பெண் பலியானார்.

குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் வசிப்பவர் காந்திமதி, (45). அதே பகுதியில் தட்டுவடை செய்யும் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 06:15 மணியளவில் அருகே உள்ள வயல் வெளிக்கு போய் உள்ளார். அங்கிருந்த பாம்பு, இவரது காலில் கடித்து விட்டது. தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு வந்து, பாம்பு கடித்த விபரம் சொல்ல, போக்குவண்டி மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச். அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு ஜி.ஹெச்,ல் சேர்த்தனர். சிகிச்சை பலனில்லாமல் நேற்று அதிகாலை 02:30 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

_____________________________________________

மண் திட்டின் மீது டூவீலர் மோதி பள்ளத்தில் விழுந்ததில் விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே மண் திட்டின் மீது டூவீலர் மோதி பள்ளத்தில் விழுந்ததில் விற்பனை பிரதிநிதி பலியானார்.

குமாரபாளையம், ராஜம் தியேட்டர் அருகே குள்ளப்பா நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார்(34). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. இவர் வேலை முடிந்து நேற்று அதிகாலை 02:15 மணியளவில், தனது டூவீலரில், ஈரோட்டிலிருந்து குமாரபாளையம் கோட்டைமேடு சர்வீஸ் ரோடு திரும்பும் இடத்தில் வந்தபோது, அங்கிருந்த மண் திட்டின் மீது மோதி, நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவரது டைரியை பார்த்து, குடும்பத்தாருக்கு போன் செய்ய, நேரில் வந்த அவர்கள், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் வழியில் இவர் இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்