குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!

குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!
X

குமாரபாளையம் கிரைம் செய்திகள் (பைல் படம்)

நேற்று குமாரபாளையம் பகுதியில் நடந்த கிரைம் செய்திகளை பார்ப்போம் வாருங்கள்.

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

குமாரபாளையம் அருகே கார் மோதி நிதி நிறுவன பணியாளர் படுகாயமடைந்தார்.

திருச்செங்கோட்டை சேர்ந்தவர் அன்பழகன் (39). நிதி நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, வேமன்காட்டுவலசு பிரிவு சாலை அருகே, தனது பஜாஜ் டிஸ்கவர் டூவீலரில் அமர்ந்தபடி மொபைல் போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே வழியில் வேகமாக வந்த கார் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனர் கோவையை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவரை கைது செய்தனர்.

_______________________________________________________________________

லாரி மோதி டூவீலரில் இருந்த தனியார் கல்லூரி வாட்ச்மேன் பலி

ராமநாதபுறம் மாவட்டம், கமுதியில் வசிப்பவர் ஆதிமூலம்(56). குமாரபாளையம் தனியார் கல்லூரியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 01:30 மணியளவில், கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் ஓரமாக, தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலையை கடந்து செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது கோவை பக்கமிருந்து வேகமாக வந்த லாரி ஒன்று, இவர் மீது மோத படுகாயமடைந்தார். இவரை அருகில் இருந்தவர்கள் குமாரபாளையம் ஜி.ஹெச். அனுப்பி வைத்தனர். ஆனால் அவர வழியில் உயிரிழந்ததாக டாக்டர் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், லாரி ஓட்டுனர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி(35), என்பவரை கைது செய்தனர்.

______________________________________________________

நின்ற டெம்போ மீது டூவீலர் மோதியதில் முதியவர் படுகாயம்

குமாரபாளையம் சங்ககிரி தாலுக்கா மஞ்சக்கல்பட்டியில் வசிப்பவர் ராசு(68). லாரி பட்டறை கூலி. இவர் நேற்று முன்தினம் இரவு 08:00 மணியளவில் பதிவு எண் இல்லாத பழைய டி.வி.எஸ். வாகனத்தில், பல்லக்காபாளையம் அருகே வரும் போது, எந்த சிக்னலும் போடாமல் நிறுத்தி வைத்த சரக்கு வாகனம் மீது மோதினார். இதில் ராசு படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் இடைப்பாடியை சேர்ந்த தமிழரசன்(26), என்பவரை கைது செய்தனர்.

___________________________________________________________

டூவீலர்கள் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தார் பகுதியை சேர்ந்தவர் குமார்(47), இவர் நேற்று மாலை 03:45 மணியளவில் மாமியார் கண்ணாத்தாள்(64) , உறவினர் மகன் ஸ்ரீநாத்(13) , ஆகிய இருவரையும் தனது டூவீலரில் பின்னால் உட்கார வைத்துகொண்டு, சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பிரிவு பகுதி அருகே வரும் போது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில், முன்னால் டூவீலரில் சென்ற மூவர் மற்றும் மோதிய வாகனத்தை ஒட்டு வந்த வேமன்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மில் தொழிலாளி ரவீந்திரன்(29) , ஆகிய நால்வரும் படுகாயமடைந்தனர். இவர்கள் நால்வரும் ஈரோடு ஜி.ஹெச்.ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!