குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!

குமாரபாளையம் கிரைம் செய்திகள்..!
X

குமாரபாளையம் கிரைம் செய்திகள் (கோப்பு படம்)

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிரைம் செய்திகளை பார்ப்போம் வாங்க.

குமாரபாளையம் கிரைம் செய்திகள்

டூவீலர்கள் மோதலில் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதலில் இருவர் படுகாயமடைந்தனர்.

திருச்செங்கோடு, வட்டப்பரப்பு பகுதியில் வசிப்பவர் பாலகிருஷ்ணன், 26. ஐ.டி. நிறுவன பணியாளர். கோபியில் உள்ள திருமண தகவல் மையத்தில் தனது ஜாதகம் பதிவு செய்வதற்காக இவரும், இவரது பெரியம்மா பாலாமணி, 50, ஆகிய இருவரும், இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு, திரும்பி வரும்போது குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் அம்மன் நகர் பிரிவு பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். அவர் ஈரோடு செல்லும் வழியில் உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த, கோபாலகிருஷ்ணன், 33, என்ற கூலித்தொழிலாளி ஆவார்.

____________________________________

மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்

குமாரபாளையம், பள்ளிபாளையம் சாலை, பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வசிப்பவர் சதீஷ்குமார், 27. இவரது மனைவி ஜெயலட்சுமி, 23. தனியார் நிறுவன பணியாளர்கள். மூன்று ஆண்டுகள் முன்பு இவர்களின் திருமணம் நடந்தது. செப். 1ல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயலட்சுமி, இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சதீஷ்குமார், குமாரபாளையம் போலீசில் தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்துள்ளார். இவரது புகாரின் மீது குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

____________________________________

கார் மோதி நிதி நிறுவன பணியாளர் படுகாயம்

திருச்செங்கோட்டை சேர்ந்தவர் அன்பழகன், 39. நிதி நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் காலை 11:00 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, வேமன்காட்டுவலசு பிரிவு சாலை அருகே, தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி மொபைல் போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே வழியில் வேகமாக வந்த கார் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனர் கோவையை சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரை கைது செய்தனர்.

____________________________________

டூவீலர் நிலைதடுமாறி விழுந்ததில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்

மேட்டூர் வட்டம், கொளத்தூரில் வசிப்பவர் விக்னேஷ், 23. கிளீனர். இவரது உறவினர் துக்க வீட்டிற்கு பெருந்துறை வந்து விட்டு, மீண்டும் கொளத்தூர் செல்ல வேண்டி, நேற்றுமுன்தினம் மாலை 04:30 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தை விக்னேஷ் ஓட்ட, பின்னால் இவரது உறவினர் மற்றும் நண்பர்களான, மகேஷ், 27, ராஜேஷ் (எ) சின்னு, 19, இருவரையும் உட்கார வைத்து சேலம் கோவை புறவழிச்சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

பல்லக்காபாளையம், கிணத்துபாளையம் அருகே வந்த போது, நிலைதடுமாறி டூவீலர் கீழே விழுந்ததில் மூவரும் பலத்த காயமடைந்தனர். மூவரும் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 08:30 மணியளவில் இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

__________________________________

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

குமாரபாளையத்தில் தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பல இடங்களில் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சடையம்பாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கையும் களவுமாக பிடிபட்ட கடையின் உரிமையாளர் ராமமூர்த்தி, 43, கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story