வழித்தட பிரச்னை: அண்ணன் குடும்பத்தாரை தாக்கிய தம்பி கைது

வழித்தட பிரச்னை: அண்ணன்   குடும்பத்தாரை தாக்கிய தம்பி கைது
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் வழித்தட பிரச்னையால் அண்ணன் குடும்பத்தாரை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்

குமாரபாளையம் அருகே உப்புக்குளம் பகுதியில் வசிப்பவர் சந்திரன், 54. விவசாய கூலி. இவருக்கும், இவரது தம்பி ராமமூர்த்தி, 47,க்கும் வழித்தட பிரச்சனை இருந்து வருகிறது. நேற்று காலை 10:15 மணியளவில் தன் வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்த அண்ணனை பார்த்து, அவ்வழியே வந்த ராமமூர்த்தி, அண்ணனை தகாத வார்த்தை பேசியுள்ளார். இதனை கண்ட சந்திரன் மகள் கீதா, 30, ஏன் சித்தப்பா இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்க, அவரையும் தகாத வார்த்தை பேசியதுடன் தடியால் அடித்துள்ளார். இதனை கண்ட கீதாவின் மகன் ரித்தீஷ், 9, தடுக்க வந்த போது, அவரையும் தடியால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அடிபட்ட கீதா, ரித்தீஷ் இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் ராமமூர்த்தியை கைது செய்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!