குமாரபாளையத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

குமாரபாளையத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு
X
தீவிர கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் இருந்தும் கூட, குமாரபாளையத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இன்று 10-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரை 423- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

குமாரபாளையம் பகுதியில், 240-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 171- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். தீவிர கட்டுப்பாடுகள் மருத்துவ கண்காணிப்பு தொடர் பரிசோதனை உள்ளபோதும், குமாரபாளையம் பகுதியில் தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே இருப்பது, அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!