குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்பாட்டம்

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்பாட்டம்
X

காங்கிரஸ் சார்பில் காமராஜபுரம் பகுதியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் சார்பில் குடியிருப்பு பகுதிகளில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில், குடியிருப்பு பகுதிகளில் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது. கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்த துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. குமாரபாளையம் நகரில் காமராஜர் நகர், காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சத்யாபுரி, கலைமகள் வீதி, தம்மன்னன் வீதி உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணை தலைவர் சிவகுமார், பொது செயலர் மனோகரன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலர்கள் கோகுல்நாத், ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் மாரிமுத்து, கிருஷ்ணன், ஈஸ்வரன் உள்ளிட்ட மகளிர் அணியினர் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!