பேரறிவாளன் விடுதலையை கண்டித்து குமாரபாளையம் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து குமாரபாளையம் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலையை கண்டித்து குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணிகள் கட்டிக்கொண்டு நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வன்முறையை எதிர்ப்போம்; கொலை ஒரு தீர்வாகாது ஆகிய வாசகங்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொருளாளர் சிவராஜ், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், நகர துணை தலைவர் சிவகுமார், நகர செயலர் சுப்பிரமணி, முன்னாள் நகர தலைவர் மோகன் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!