குமாரபாளையத்தில் வணிகர், வியாபாரிகள் தடுப்பூசி போடாவிட்டால் அபராதம்

குமாரபாளையத்தில் வணிகர், வியாபாரிகள் தடுப்பூசி போடாவிட்டால் அபராதம்
X

கோப்பு படம்

குமாரபாளையம் வணிகர்கள், காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று, நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு, நேற்று நகரில் உள்ள சில வணிக நிறுவனங்கள் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டார். இதில், பலர் இன்னும் முதலாவது தடுப்பூசி மற்றும் 2வது தடுப்பூசி போடப்படாதது தெரிய வந்தது.

இதையடுத்து, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு வணிகர்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளிடம் தெரிவித்திருப்பதாவது: வரும் ஞாயிறு நடைபெறவுள்ள மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், அனைத்து வணிகர்கள், தினசரி காய்கறி கடை வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அடுத்து வரும் நாட்களில் இதேபோல் ஆய்வு செய்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அனைத்து வணிகர்கள், காய்கறி கடையினர் மீது அபராதம் மற்றும் கடையை அடைத்து சீல் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்