குமாரபாளையம் கல்லூரி மாணவி திடீர் மாயம் பற்றி போலீசார் விசாரணை

குமாரபாளையம் கல்லூரி மாணவி திடீர்  மாயம் பற்றி  போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவி மாயமானது பற்றி போலீசார் தேடி வருகிறார்கள்.

குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி (வயது 35.) கட்டுமான தொழிலாளி. இவரும், இவரது கணவர் தேவராஜ் என்பவரும் நேற்று முன்தினம் உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்று விட்டு, இரவு 08:00 மணியளவில் வீட்டிற்கு வந்த போது இவரது 17 வயது மகள் வீட்டில் இல்லாதது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் சேர்ந்த இவர் முதல் நாள் வகுப்பு தொடங்கும் முன்பே காணாமல் போனது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன மாணவியை குமாரபாளையம் போலீசார் பெற்றோர் கொடுத்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!